Our Tisaiyanvilai – Hot News

திசையன்விளை ஒரு முன்னோடி பேரூராட்சி
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி மக்களின் வாழ்வாதாரம் வியாபாரம். பல சமூகம் ஒன்றாக பயணிக்கிற சமத்துவ நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற பேரூராட்சி . கடந்த சில மாதங்களாக சில திருட்டுகள் நடப்பதும் அவை மிகப்படுத்தி பெசப்படுவதுமாக இருந்தது. இதேபோல் தொடர் நிகழ்வுகளால் ஏதோ ஒரு அச்ச உணர்வு இப்பகுதி வியாபாரிகளிடமும் பொது மக்களிடமும் இருந்தது. இந்த நிலையை மாற்ற வேண்டும் வியாபாரிகளும் பொது மக்களும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தவண்ணம் இருந்தனர்.
வியாபாரிகளும் பொது மக்களும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டதின் பலனாக காவல்துறை மற்றும் பொது மக்களின் கலந்தாய்வு கூட்டம் பேரூராட்சி தலைவர் A .K . சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போது வட மாநில இளைஞர்கள் வெளியூர் வாசிகள் அதிகமாக வந்து செல்வதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஊருக்குள் வந்து செல்லும் வாகனங்களை கண்காணிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடப்பட்டது. இதன் முடிவில் திசையன்விளை பேரூராட்சி முழுதும் அனைத்து பகுதிகளையும் காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கும் வசதியை ஏற்ப்படுத்தி தரப்படும் என்று பேரூராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்தியாவில் முதல் முறையாக திசையன்விளை பேரூராட்சி பகுதி முழுவதும் கிட்டத்தட்ட 7 கிலோ மீட்டர் சுற்றளவில் கம்பியில்லா இணைப்பு மூலம் (வைபை ) 72 கண்காணிப்பு காமிராக்களை அமைத்து திசையன்விளை காவல் நிலையத்தில் பெரிய திரையில் கண்காணிக்கப்பட்டு குற்ற நிகழ்வுகள் நடக்காத வாறும் சிறு சிறு குற்றம்கள் கூட உடனடியாக கண்டு பிடிக்கும் பொருட்டு இந்த காமிரா பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
Good Rain in Tisaiyanvilai.
Uvari Special
உவரியில் ஸ்ரீ சுயம்பு லிங்க ஸ்வாமிகள் கோவிலில் தை தேரோட்டம் மிக சிறப்பாக நடை பெற்றது. பொதிகை டீவி இல் நேரடி ஒளி பரப்பு நடைபெற்றது. லட்சக் கணக்கான மக்கள் கூடி தெய்வ தரிசனம் கண்டு மகிழ்ந்தார்கள்
Bazaar Roads in Tisaiyanvilai
திசையன்விளையில் கன மழை காரணத்தால் எல்லா ரோடு களும் மோசமான நிலையில் கேட்டுப் போய் விட்டதால், புதிதாக ரோடு போடும் வேலை ஆரம்பம் ஆகி விட்டது. மக்களே இன்னும் கொஞ்ச நாளில் திசையன்விளை ரோடு கள் அனைத்தும் பள பள வென ஜொலிக்கப்பொகின்றன . நல் வாழ்த்துக்கள் .

No Comments Yet
You must log in to post a comment.