Fitness Center

942952_364965320280612_959073283_n DSC00009

உவரி கோடி அற்புதர் புனித அந்தோனியார் கோவில் திருவிழா 2017 ஜனவரி மாதம் 17 ம் தேதி மாலை 6.00 மணிக்கு  கோடி ஏற்றத் துடன் ஆரம்பம் ஆகி 2017 ஜனவரி 28 ம் தேதி மாலை சிறப்பு மாலை ஆராதனையுடன் 2017 ஜனவரி 29 ம்  தேதி அன்று சிறப்பு திருப்பலியுடன் நிறைவு பெறும் .

936089_427788407373760_676639534665689673_n

தென் தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற தேவாலயம்களில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரியில் உள்ள அந்தோனியார் ஆலயம் ஒன்றாகும் . இந்த ஆலயம் 1778ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.பழமையும் பெருமையும் நிறைந்த ஆலயமாக விளங்கி வருகிறது . தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் உவரி அந்தோனியார் ஆலயத்துக்கு ஏராளமானவர்கள் வருகிறார்கள் . கேரளாவில் இருந்தும் வருகிறார்கள்.ஆலய திருவிழாவின் போது லட்ச கணக்கான மக்கள் உவரியில் திரள்கிறார்கள்.
உவரி அந்தோனியார் ஆலயத்தை பசிலிக்கா எனப்படும் பேராலயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . இது தொடர்பாக போப் ஆண்டவரின் பிரதிநிதியாக இத்தாலி நாட்டு கத்தோலிக்க பிஷப் புருனோ போர்டி 11-2-2015 செவ்வாய் அன்று உவரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.

உவரி கோடி அற்புதர் புனித அந்தோனியார் ஆலயம் பசிலிக்கா ஆக பிரார்த்திப்போம் . St. Anthony Church, Uvari is under consideration for up gradation as Basilica.

A basilica is simply an important church building designated by the pope because they carry special spiritual, historical, and/or architectural significance. Once named a basilica the church can’t lose its status as a basilica. A basilica may or may not also be the cathedral of the diocese. This is the highest permanent designation for a church building.

07

திருநெல்வேலி பக்கம் உள்ள புளியம்பட்டி புனித அந்தோனியார் கோயில்

images20161108_115234

உவரியில் உலக சாதனைக்கு முயற்சி 

153 மணி நேரம் இடைவிடாத பிரார்த்தனை
உவரி செல்வமாதா ஆலயத்தில் 153 அடி உயர மாதா சுரூபம் அமைக்கப்பட உள்ளது . இதற்காக செல்வமாதா ஆலயம் முன்பு உலக நன்மை வேண்டி 153 மணி நேர இடைவிடாத பிரார்த்தனை 14-11-2016 அன்று தொடங்கி 20-11-2016 ஞாயிறு வரை இரவும் பகலும் நடைபெறும்.
153 அடி உயர மாதா சுரூபம் மாடல் 153 இஞ்சில்  தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் திரளாக வந்து இதை வெகு ஆர்வமுடன் கண்டு மகிழ்கிறார்கள் .

 

 

Hindi Coaching