Fitness Center

Gall1 Gall2

Gall11 Gall24

சந்தனம் மருந்தாகும் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்  

(Near Tisaiyanvilai)

கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர் கொட்டுப்பார்வையில் அமைந்துள்ள புண்ணியத்தலம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்.

தல வரலாறு 

முன்னொரு காலத்தில் உவரி, மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கடம்பக்கொடிகள் அதிகமாக வளர்ந்து இருந்ததால், கடம்பவளம் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் வாழ்ந்த ஆயர்குல பெண் ஒருவர், பால் வியாபாரத்திற்க்காக சென்ற பொது கடம்பக்கொடி காலில் பட்டு பால் சிந்தியது. இவ்வாறு பல நாள்கள் ஒரே இடத்தில் பால் சிந்தியது. இதையறிந்த அப் பெண்ணின் கணவர் ஆவேசப்பட்டு கடம்பக்கொடியை புதர் என நினைத்து வெட்டினார். அப்போது கடம்பக்கொடியிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த அவர், இதுபற்றி ஊர் பெரியவரிடம் கூறினார். மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர்.அப்போது ஊர் பெரியவர் சுவாமியின் அருளால் அருள் வாக்கு அருளினார்.

“ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை அரைத்து பூசினால், ரத்தம் வடிவது நின்றுவிடும்” என்றார். மேலும் அந்த வனப்பகுதியில் சந்தன மரம் இருக்கும் இடத்தையும்  அடையாளம் காட்டினார். அவர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற மக்கள் அங்கு சந்தன மரம் இருப்பதை பார்த்து வியப்படைந்தனர். பின்னர் சந்தன மரத்தின் கொம்பை எடுத்து அரைத்து ரத்தம் வந்த இடத்தில் பூசினார்கள். இதையடுத்து ரத்தம் வழிவது நின்றது.

உலகை காக்கும் பரம்பொருளான பரமேஸ்வரன், இந்த ஆலயத்தில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். மக்கள் ஓலையால் கூரை வேய்ந்து கோயில் எழுப்பினார்கள். சுயம்புலிங்க சுவாமிக்கு பால் அபிஷேகமும் நான்கு வேளை பூஜையும் செய்து வணங்கினர். உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சந்தனத்தை பூசி ரத்தத்தை நிறுத்திய காரணத்தால் அவரை வழிபட வரும் பக்தர்களுக்கும் சந்தனத்தை மேனி எங்கும் பூசுவதற்கு கொடுக்கிறார்கள். சுவாமியின் திருமேனியில் தினமும் சந்தனத்தை அரைத்து பூசுகின்றனர். தீராத நோய் உள்ளவர்களும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் சந்தனத்தை மருந்தாக்கி நலம் பெறுகின்றனர். சந்தனம் மற்றும் விபூதியை தண்ணீரில் கலந்து அருந்துகிறார்கள்.

banner5Gall26

திருவிழா

இந்த  ஆலயத்தில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடை பெறுகிறது. இதில் தைப்பூசம் அன்று கொடியேற்றப்பட்டு 10 நாள்கள் பிரமோற்ஸவம் நடைபெறும். வைகாசி விசாக திருவிழாவின் போது சுவாமி அன்பே சிவமாக, சிவமே முருகப்பெருமானாக மகர மீனுக்கு காட்சி கொடுப்பார். இங்கு  இந்த விழா விமர்சையாக கொண்டாடப்படும். தை அமாவாசை, மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை விசு, வருஷாபிஷேகம், ஆடி அமாவாசை, தீர்த்தவாரி,  நவராத்திரி கொலு விஜய தசமி, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை தீபம் போன்ற விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும்.சுவாமியின் உடனுறை சக்தி பிரம்மசக்தி ஆவார். கோவில் வளாகத்தில் பரிவார தேவதைகளான முன்னோடி சுவாமி, இசக்கி அம்மன், பேச்சி அம்மன், மாடசாமி ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. விநாயகர் கோவிலுக்கு மேற்கு பகுதியில் பிரசித்தி பெற்ற வன்னிய சாஸ்தா கோவில் உள்ளது.

உவரி கோவிலில் காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்டம், பகல் 11.30 மணிக்கு உச்சிக்காலம், இரவு 7 மணிக்கு சாயரட்ச்சை, 8.30 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும். மார்கழி மாதம் நடை திறக்கும் நேரம் அதிகாலை 3.30 மணி.

Hindi Coaching